மாரவில பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொலை; 10 வயது சிறுவனும் காயம்!

மாரவில, மரந்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, அவரின் அருகில் இருந்த 10 வயது சிறுவனும் காயமடைந்துள்ளான்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் மாரவில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேநேரம், காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post