சாஹிப்
புத்தளம் - ஆனமடுவ மஹஉஸ்வெவ ரத்னபால தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று (4) இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ, மஹஉஸ்வெவ - வெலேவெவ வடக்கு பகுதியைச் சேர்ந்த ரத்பால தேசிய பாடசாலையில் எட்டாம் தரத்தில் கல்வி கற்றுவந்த ஈக்சனா எனும் 13 வயது மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய நடனப் போட்டிக்கு தெரிவான குறித்த மாணவி நேற்று பாடசாலைக்கு வருகை தந்து நடனப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடக்க முயன்ற போது, அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு வந்த லொறி மாணவி மீது தோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவியை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.