ரிபாக்
முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் கீழ் உள்ள கொத்தாந்தீவு கிராம சேவகர் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "ரண் விமன" வீடு அக்கரபஹ சமுர்த்தி சங்கத்தின் பயனாளியான ஏ.என்.ஜயந்தியிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (4) இடம்பெற்றது.
மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எஸ்.எம்.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முந்தல் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டயிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த வீட்டினை பயனாளியிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த நிகழ்வில் முந்தல் சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர் பி.எம்.தினுக சந்திரசேகர, சமுர்த்தி சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர் எம்.கிங்ஸ்லி டேவிட், கொத்தாந்தீவு கிராம உத்தியோகத்தர் சஞ்சீவனி , கொத்தாந்தீவு சமுர்த்தி உத்தியோகத்தரும், மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் வலய உதவி முகாமையாளருமான ஏ.எம்.முஸம்மில், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ்.கீர்த்தி லதா, ரஸீன் ரஸ்மின் உட்பட கொத்தாந்தீவு சமுர்த்தி சங்க பலரும் கலந்துகொண்டனர்.
சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வீட்டை நீர்மாணிப்பதற்காக
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழ் இயங்கும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்ததுடன், மிகுதி பணம் பயனாளியின் பங்களிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.