ரிபாக்
புத்தளம் - வனாத்தவில்லுவ, காட்டுபுளியங்குளம் பிரதேசத்தில் விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட மோதலில் 38 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் முந்திரி தோட்டமொன்றில் காவலாளியாக பணியாற்றி வந்த 38 வயதான அசங்க சஞ்சீவ கருணாரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தனது நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டிருந்தபோது அங்கு ஏற்பட்ட வாக்குவாதம் பின் கைகலப்பாக மாறியுள்ளதாகவும், இதன்போது தடி ஒன்றினால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் நண்பரொருவர் வனாத்தவில்லுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.