கற்பிட்டி அல்-அக்‌ஷாவுக்கு அள்ளிக்கொடுக்கும் 2000 OL Batch மாணவர்கள்...!


முஹம்மது ரிஸ்வி , ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - அல் அக்ஸா தேசிய பாடசாலை தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் மிக முக்கியமான தேவையாக காணப்பட்ட ஒலி பெருக்கி வசதி மற்றும்  மேடைக்கான திரைச்சீலை வசதி என்பவற்றை அப்பாடசாலையின் மிலேனியம் 2000 O/L Batch மாணவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

அல் - அக்‌ஷா தேசியப் பாடசாலையின் பிரதி அதிபர்ளான எம்.என்.எம்.  நஸ்ரின் மற்றும் எஸ். சாஜினாஸ் ஆகியோரிடம், மிலேனியம் 2000 OL Batch மாணவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பாடசாலைக்கு சமூகமளித்த அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 2000 O/L Batch பழைய மாணவர்களிடம் பிரதி அதிபர்கள் காரியாலயத்திற்கு தேவையான காரியாலய மேசைகள் மற்றும் காரியாலய கதிரைகள் என்பனவற்றின் தேவைகள் பற்றி இதன்போது தெரியப்படுத்தப்பட்டது.

குறித்த வேண்டுகோளை மறுக்காமல் அந்த கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்ட,  2000 ஆண்டு O /L Batch பழைய மாணவர்கள் அதனையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள்: கற்பிட்டி நிருபர் ரிஸ்வி




Post a Comment

Previous Post Next Post