முட்டைகளுக்கு விலை கட்டுப்பாடு...!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நியாயமான விலையில் முட்டைகளை வழங்கும் முயற்சியில், விலைக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சருக்கும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது,   தற்போதுள்ள முட்டை விலைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தற்போது ரூ. 48 ஆக உள்ள விலையை மேலும் குறைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தப்பட்டது

முட்டை உற்பத்தியாளர்களும் விலை குறைவதை ஏற்கனவே அவதானித்துள்ளதால் விலையை குறைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.  

எவ்வாறாயினும், முட்டை உற்பத்தியாளர்கள் விலையை குறைக்கத் தவறினால் கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

Post a Comment

Previous Post Next Post