மனைவியுடன் சண்டை; ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்...!

எம்.ஏ.ஏ.காசிம்

கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post