கூட்டுறவு கிராமிய வங்கியில் கொள்ளை...!

குருநாகல் -  உயந்தன பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமிய வங்கியில் ஆயுதம் ஏந்திய இருவர் இன்று பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தொரடியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வங்கிக்குள் நுழைந்த இரண்டு கொள்ளையர்கள், கையில் கைத்துப்பாக்கியை ஏந்திய நிலையில்  வங்கியில் பணிபுரியும் இரு அதிகாரிகளை மிரட்டி அவர்களிடமிருந்த பணத்தை  கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறித்த கொள்ளையர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகை தந்துள்ளதுடன், உயந்தனை எரிபொருள் நிரப்பு நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் அமைந்துள்ள வங்கியில் இவ்வாறு கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் , குருநாகல் பகுதியில் இவ்வாறானதொரு பொதுக் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றிருப்பது இதுவே முதல் தடவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தகொள்ளைச் சம்பவம் தொடர்பில் தொரடியாவ பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post