ரிஷாத் பதியுதீன் மு.ம.வித்தியாலயத்தில் நிர்வாகக் காரியாலயம் திறந்து வைப்பு

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - றிஷாத் பதியுதீன் மஹாவிதத்தியாலயத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட நிர்வாகக் காரியாலயம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.ஏ.எம்.பௌசின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜூனா பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிர்வாக காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் புத்தளம் மாவட்ட செயலாளர் கலாநிதி எஸ். ஆர். எம்.எம். ஆசாத் ஆசிரியர் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட வலய கல்விப்பணிப்பாளர் ஏ.எச்.எம்.அர்ஜுனாவுக்கு , பாடசாலையின் அதிபர்  ஏ.ஏ.எம். பெளசின் நினைவுச்சின்ன ஒன்றையும் வழங்கி கௌரவித்தார்.

தனவந்தர்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடையின் மூலமாக சுமார் 2.5 மில்லியன ரூபா செலவில் குறித்த நிர்வாக காரியாலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தனவந்தர்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடை மூலம் இவ்வாறு அழகான முறையில் திட்டமிட்டு நிர்வாக காரியாலயம் புனரமைக்கப்பட்டுள்ளமையை நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதி உட்பட அனைவரும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Previous Post Next Post