கற்பிட்டி அல்-அக்‌ஷா பாடசாலை மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு...!

ரிஸ்வி - கற்பிட்டி

அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி எஸ்.சீஹா செய்ன் , இரண்டாம் மொழி சிங்கள எழுத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 8 வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட 32 கோட்டக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மாகாண மட்ட இரண்டாம் மொழி சிங்கள எழுத்தாக்கப் போட்டிகள் குருநாகலில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது, புத்தளம் கல்வி வலயத்தின் கீழ் உள்ள கற்பிட்டி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குற்பட்ட அல் அக்‌ஷா தேசியப் பாடசாலையில் கல்வி பயிலும் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட மேற்படி மாணவி, இரண்டாம் மொழி சிங்கள எழுத்தாக்கப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று, தேசியப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

மேற்படி மாணவிக்கு சகல வழிகளிலும் பயிற்சிகளை வழங்கிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவிப்பதாக மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,  அண்மையில் இடம்பெற்ற சிங்க மொழி பேச்சு போட்டியில் அல் அக்‌ஷா தேசியப் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் எம்.என். ஆயிஷா மனால்  என்ற மாணவியும் மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post