புத்தளத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வர்த்தகர்...!

ரிபாக்

புத்தளம் - ஆனமடுவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரழந்த வர்த்தகரின் மனைவி , கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் , இந்நிலையில் தனது மூன்று பிள்ளைகளையும்  இவரே பராமரித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த குறித்த வர்த்தகர் வட்டிக்கு பணம் கொடுத்தல் உட்பட சில வியாபாரங்களை நடத்தி செல்வதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், இவர் தனது  பிள்ளைகளை தினமும் பாடசாலைக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டுக்கு  அழைத்து வருவதும்  விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்த நேரம் , தமது தந்தை பாடசாலைக்கு வராரதால், பிள்ளைகள் வீட்டுக்கு  வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வீடு திறந்திருப்பதை அவதானித்த பிள்ளைகள், தந்தையை வீடு முழுவதும் தேடி பார்த்த போது, தந்தை மேல் மாடியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக  காணப்பட்டார் என வர்த்தகரின் மூத்த மகன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post