இலங்கையின் எழுச்சிக்கு கரம் கொடுத்து உதவுவோம் - Muslim Hand தலைவர்

இந்த நாடு சுபீட்சமடைவதற்கு  நாம் உதவுவதற்கு விரும்புகிறோம். நாடு பலமடைவதற்கு கல்வியே சிறந்த ஆயுதமாகும். இந்த நாட்டுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் டாக்டர்கள், பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், நிர்வாக உத்தியோகத்தர்களை உருவாக்குவதற்கு நாம் உதவுவோம் என முஸ்லிம் ஹென்டில் சார்பில் உறுதியளிக்கின்றேன் என முஸ்லிம் ஹென்டின் தலைவர் பீர் செய்யத் லக்கிஹி ஹசனைன் தெரிவித்தார்.

முஸ்லிம் ஹென்டிலின் கொழும்பு அலுவலகத் திறப்பு விழாவை முன்னிட்டு கொழும்பு சினமன் ஹோட்டலில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

சர்வதேச தொண்டர் ஸ்தாபனமான முஸ்லிம் ஹென்டின் 20ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், அரசாங்க, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், தேசிய, சர்வதேச அரச சார்பற்ற இயக்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய சர்வதேச அமைப்பின் தலைவர் 

கூறியதாவது, 1993 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் நொட்டின் ஹாமில் அமைக்கப்பட்ட எமது அமைப்பு, சர்வதேச மனிதநேய அமைப்பாகும். 

இந்த அமைப்பு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் வலையமைப்புகளைக் அமைப்புகளைக் கொண்டது. பிரான்ஸ், தென்னாபிரிக்கா, அமெரிக்கா, துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிதி திரட்டும் அலுவலகங்களையும் கொண்டது. 

ஆரம்ப முதல் உலகின் பிரதான அவசர கால நிலைகளின் போது மனிதாபிமான வேலைகளுக்காக நாம் முன்னணியில் இருந்து வருகிறோம்.இலங்கையில் நாம் இந்நாட்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு எமது ஐந்தாண்டு பயண விழாவினை மேற்கொள்கிறோம். 

பிரித்தானியா, துருக்கி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யெமன், சோமாலியா, கம்பியா, பங்களாதேஷ், ஒரிட்டோனியா, செனகன், மாலாவி, மாலி, நைகர் ஆகிய நாடுகளில் பணி புரியும் எமது பணியாளர்கள் மற்றும் நம்பிக்கைகள் இந்த உபாய வழி மீளாய்வினை மேற்கொள்வார்கள்.

இலங்கையில் எமது பணிகள் சுனாமியின் பின் 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது. அலுவலகம் 2008 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. எமது தற்போதைய அலுவலகம் புத்தளத்தில் உள்ளது. கொழும்பு அலுவலகத்தை திறந்து வைக்கும் நாம் 22 மாவட்டங்களில் எமது சேவைகளை வழங்குகிறோம். எமது பாடசாலை புத்தளத்தில் இயங்குகிறது. 

உள்ளூர் பாடநெறிகளைப் போதிக்கும் ஆங்கில மொழிப் பாடசாலை மிகச் சிறந்த பாடசாலையாகவுள்ளது. நாம் உணவு உதவிகளை வழங்குவதோடு, வாழ்வாதாரத் திட்டங்களையும் சுத்தமான குடிநீர் திட்டங்களையும் வழங்குகிறோம். 

நிறைந்த இயற்கை வளங்களைக் கொண்ட இந்த அழகான நாட்டில் காடு, ஆறு, கடல், பழவர்க்கங்கள், தேயிலைத் தோட்டங்கள், மாணிக்கக்கல், வாசனைத் திரவியங்களைக் கொண்டதாக உள்ளது. இதனைப் பார்வையிடுமாறு எமது சகாக்களுக்கு அழைப்பு விடுத்தோம். 

இந்த நாடு பல பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களை எதிர் கொண்டது. மக்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் நோக்கும் முறை முறை ஒன்று இருக்கின்றது. இவ்வாறான போதும் நாம் நம்பிக்கை அடிப்படையாகக் கொண்ட இயக்கமாகும். 

வியாபாரத்தை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகிறோம். எமக்கு சரியான இஸ்லாத்தைக் காண்பிக்க வேண்டும். அது ஸகாத் மற்றும் சரிட்டி அமைப்பை நாம் இன, மத, பால் போன்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் செயற்படுகிறோம். 

எமது பாடசாலை மற்றும் திட்டங்கள் மூலம் சகலரும் நன்மை பெறுகிறார்கள். சகல இன மாணவர்களும் வந்து படிக்கிறார்கள். பல்வேறு இன ஆசிரியர்களும் எமது பாடசாலைகளில் படிப்பிக்கிறார்கள். 

நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார், எரான் விக்கிரமரத்ன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் ஆளுநர் ஆஸாத் சாலி, ராஜதந்திரிகள், முஸ்லிம் இயக்க பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். 

முஸ்லிம் ஹேன்ட் இலங்கை அலுவலகம் கொழும்பு -03, ஆனந்த குமாரசுவாமி மாவத்தையில் 42/14ஆம் இலக்கத்தில் இயங்குகிறது. முஸ்லிம் ஹென்டிலின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி அன்ஸார் முஹம்மட் மிஹ்ழார் உட்பட பலர் இங்கு உரையாற்றினார்கள். (நன்றி - உதயம்)



Post a Comment

Previous Post Next Post