சாஹிப்
புத்தளம் - தப்போவை பாதுகாக்கப்பட்ட வனத்தில் மான் ஒன்றை வேட்டையாடி இறைச்சியாக்கிய சந்தேக நபர் ஒருவரை புத்தளம் கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின் பிரதானி வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் ரணசிங்க தலைமையிலான அதிகாரிகள் குழு மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து ஒரு தொகை மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி குறித்த மானை வேட்டையாடியுள்ள சந்தேக நபர், வேட்டையாடிய மானை இறைச்சியாக்கி விற்பனை செய்வதற்கு முயற்சி செய்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என கருவலகஸ்வெவ வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலும், படமும்; DWC official FB Page
