நல்லாந்தழுவை பிறப்பிடமாகவும் விருதோடையை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற காசி மொஹிதீன், மம்மர் முத்து அவர்களின் அன்பு மகன் அல்ஹாஜ் முஹம்மத் ஸகரிய்யா அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் பரீதா உம்மாவின் அன்புக் கணவரும், கமால் அப்துல் நசீர், தாஹியா, ஹிதாயா, இம்தியாஸ், பஸ்லிகான், ஹன்ஸா, ஷக்கீ, பஹ்மி, அமீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ஹமீட் ஹூசைன், அலி மற்றும் அஸீஸ், ஜஸீமா, நௌபியா, சகாமா, நிஸாயா, முபீஸா, ரனீஸா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இப்னு, சாலிப், மன்ஸூர், பௌசியா, அஸ்வர், மற்றும் பதூர் ஸமான், ரஹ்மத், மிஸ்ரியா ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (07) மஹ்ரிப் தொழுகையுடன் விருதோடை முஸ்லிம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த அன்னாருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக...
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعونَ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
நீங்களும் அந்த ஜனாஸாவுக்காக உங்களது பிரார்த்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கும் அருள் செய்வானாக......
