மதுரங்குளி ஸ்ரீ சுப்ரமணிய ஆலய குடமுழுக்கு பெருவிழா


மதுரங்குளி 27

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி நகரில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஸ்ரீ சுப்ரமணிய ஆலய நவகுண்ட பக்ஷ நூதன பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா இன்று (27) மங்கள வாத்தியம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

கடந்த 25 ஆம் திகதி கிரியை ஆரம்பமாகி நேற்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பக்தர்களினால் எண்ணெய்க் காப்பு இடம்பெற்றது.

அதனையடுத்து, இன்று காலை 6.15 முதல் தேவபாராயணம், விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாஜனம், யாகப் பூஜை, விஷேட ஹோமங்கள், மஹாபூர்ணாகுதி, பிரதக் ஷணம், தீபாராதனை, வேத ஸ்தோத்திர திருமுறை நிருத்திய கீத வாத்திய சர்வாஞ்சலி சமர்ப்பணம், ஆசிர்வாதம், யாத்திராதாவனம், அந்தர்பலி, பகிர்பலி, கும்பஉத்தாபனம், வீதிபிரதட்ஷணம், தூபிகள் ராஜகோபுர அபிஷேகம் தொடர்ந்து காலை 8.34 முதல் காலை 10.13 வரையுள்ள மீனலக்ன சுபமூகூர்த்த வேளையில் தேவர்கள் பூமாரி பொழிய சங்குதுந்தூபி நாதங்கள் முழங்க வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீP சுப்ரமணிய பெருமானுக்கும் கும்பாபிஷேக குடமுழுக்குப் பெருவிழா நடை பெற்றது.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

ஸ்ரீ சுப்ரமணிய ஆலய நவகுண்ட பக்ஷ நூதன பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக குடமுழுக்கு விழாவுக்கு புத்தளம் மாவட்ட செயலாளர் உட்பட அரசியல் பிரமுகர்கள், அரச அலுவலக அதிகாரிகள்; உள்ளிட்டவர்கள் பலரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் மற்றும் தகவல்: முந்தல் நிருபர்










Post a Comment

Previous Post Next Post