கொழும்பு 29
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று (27) தாருஸ்ஸலாமில் நடைபெற்றது.
கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் ஆகியோர் கட்சியின் பிரதித் தலைவர்களாக நியமிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
மேலும், டொக்டர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர் ஆகியோர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதி அமைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தெளபீக்கின் வழிகாட்டலின் கீழ் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.


