முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நிஹ்மதுல்லாஹ் நிலோபர் நியமனம்

- ரஸீன் ரஸ்மின் -

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நிஹ்மதுல்லாஹ் நிலோபர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மன்னார் வேப்பங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், புத்தளம் மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம், மருதமுனை அல்- மனார் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றதுடன் வவுனியா பல்கலைக்கழகத்தில் கணணித்துறையில் சிறப்பு பட்டத்தையும் பெற்றுள்ளார்.

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் ஆசிரியராக கணமையாற்றி வந்த இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக நடைப்பெற்ற இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தார்.

பின்னர், வட மத்திய மாகண  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பின்னர், 2022.02.22ஆம் திகதி முதல் 2023.10.01 ஆம் திகதி வரை புத்தளம் பள்ளம பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச  செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில், இம்மாதம் 2 ஆம் திகதி முதல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post