தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கற்பிட்டி பிரதேச சம்மேளனத்தின் புதிய தலைவராக சஜான் தெரிவு

ரிஸ்வி ஹூஸைன்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கற்பிட்டி பிரதேச செயலக சம்மேளனத்திற்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு கற்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்றது.

இந்த நிர்வாக தெரிவில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 31 இளைஞர் கழக நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 

இதன்போது,  கற்பிட்டி இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் பதவிக்காக முசல்பிட்டி கிராம சேவகர் பிரிவின் இளைஞர் மன்ற தலைவர் முஹம்மட் ஹிஜாஸ, கற்பிட்டி மண்டலகுடா Power surge இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ். முஹம்மது சஜான் ஆகியோர் போட்டியிட்டனர். 

இதன்போது, முஹம்மது  ஹிஜாஸ் 18 வாக்குகளும் , அவரை எதிர்த்து போட்டியிட்ட கற்பிட்டி மண்டலகுடா Power surge இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ். முஹம்மது சஜான் 70 வாக்குகளும் பெற்றனர். 

அதன் அடிப்படையில், எஸ்.முஹம்மது சஜான் 53 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளதுடன் தேசிய இளைஞர்  சேவை மன்றத்தின் கற்பிட்டி பிரதேச சம்மேளனத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

Post a Comment

Previous Post Next Post