புத்தளம் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற 06 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான சதுரங்க சமர் "பெட்ல் ஒப் ச்செஸ்'' போட்டியில் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி அனிக்கா நிம்சாத் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேயர் ஷெஸ் கிளப் ஏற்பாட்டில் புத்தளம் - நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையில் நடைபெற்ற மேற்படி போட்டி நிகழ்ச்சியில் 6 வயது முதல் 16 வயது வரையிலான 500 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.
இதில் 6 வயதுக்குற்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் அனிக்கா நிம்சாத் தனது திறைமையை வெளிப்படுத்தி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தனது பாடசாலைக்கும், பெருக்குவட்டான் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி மாணவியான அனிக்கா நிம்சாத் பெருக்குவட்டானைச் சேர்ந்த முஸ்தபா நிம்சாத், ஹரிஷா தம்பதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.