கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் திரு S.M.M.ஹனிபா (SLPS-1) அவர்கள் தனது சேவையில் இருந்து கடந்த (07.08.2023 ) முதல் ஓய்வு பெற்றார்.
இவர் ஆசிரியர் சேவையில் 1984.12.27 அன்று முதல் நியமனம் பெற்றார். பிறகு புத்தளம் பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 1985.02.14 அன்று ஆரம்ப உதவி ஆசிரியராக பதவியேற்று மேலும் இப்பாடசாலையில் 1992 ல் அதிபராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இப்பாடசாலையில் 17 ஆண்டுகள் சேவையாற்றி 2002 ஆண்டு புத்தளம் கடையாமோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக ஒருவருடம் கடமையாற்றிய பின் 2003ல் புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் SLPS-2 ஆக பதவி உயர்வு பெற்று அதிபர் சேவையில் இணைந்து கொண்டார்.அங்கு சுமார் 11 ஆண்டுகள் அதிபராக சேவையாற்றினார்.
2013 புத்தளம் கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் SLPS-1 பதவி உயர்வு பெற்று அதிபராக இணைந்து கொண்டார். இதன்போது 2015.01.08 அன்று விபத்துக்குள்ளானார். பிறகு 2018.04.15 மீண்டும் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையில் இணைந்து கொண்டார். பின்னர் 2022.10.05. மீண்டும் புத்தளம் கணமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக இணைந்து கடமையாற்றி இன்று ஓய்வுபெறுகிறார்.
இவரது மொத்த சேவை காலம் இன்றுடன் 38 வருடங்களும் 07 மாதமும் 10 நாட்களும் ஆகும். இதில் 07 வருடங்கள் ஆசிரியராகவும் 32 வருடங்கள் அதிபராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் 02 தடவைகள் சிறந்த அதிபருக்கான விருதினை வடமேல் மாகாணத் திணைக்களத்தின் மூலம் பெற்றமை சிறப்பம்சமாகும்.