உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி புத்தளம் - எருக்கலம்பிட்டி (நாகவில்லு) ஜும்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் உட்பட பிரதேச மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது சுலோகங்களை ஏந்தியவாறு, உடனடியாக உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதன்போது, தேர்தலுக்கான பணத்தை சேகரித்து தருவதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் 'உண்டியல்' மூலம் பணத்தை சேகரித்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.
Video Link : https://youtu.be/NaAAGyGOFjY


