(File Pic)
புத்தளம் - ஆனமடுவ கொதலகெமியாவ பகுதியில் காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த காட்டு யானைக்கு 30 வயது எனவும் 8 அடி உயரம் எனவும் மதிக்கப்படுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த காட்டு யானை மின்சாரம் தாக்கியதிலேயே உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த குறித்த காட்டு யானைக்கு உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
குறித்த யானை உயிரிழந்தமை தொடர்பில் காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
