வீதியை புனரமைக்க கோரி கற்பிட்டியில் ஆர்ப்பாட்டம்


முந்தல் நிருபர்

கற்பிட்டி- ஆனைவாசல் வீதியை புனரமைத்துக் தருமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கற்பிட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஆனைவாசல் கொம்பனிவத்தைக்குச் செல்லும் வீதியை புனரமைப்பு செய்வதற்கு உலக வங்கி சுமார் மூன்று கோடி ரூபாவை ஒதுங்கியிருந்தது. 

எனினும், இந்த பாதை புனரமைப்பு செய்யப்படாமையினால் இவ்பாதையைப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், மழை காலங்களில் பாதையில் வெள்ள நீர்தேங்கி காணப்படுவதனால், பொதுமக்களும், வாகன சாரதிகளும், பாடசாலை மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.



Post a Comment

Previous Post Next Post