இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய துரதிஷ்டவசமான உறுப்பினர்கள் நாங்கள் என்று கூறுவதில் தவறில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக அமல் மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழமை. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பயன்படுத்தி பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பெறும் நிதியை நாம் இழந்துவிட்டோம். இதனால், நாம் எதிர்பார்த்த அபிவிருத்தி உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க முடியவில்லை.
நாங்கள் பாராளுமன்றம் சென்றது முதல் எமது நாடு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. கொரோனா தொற்று நோயால் இந்த நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.
இவ்வாறு நாட்டின் பொருளாதார சரிவுநிலை உள்ளிட்ட பல காரணங்களால் எம்.பிக்களுக்கான அந்த நிதியை நாம் இழந்தோம்.
உண்மையில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவர்களாவே நான் பார்க்கிறேன் என்றார்.
- முஹம்மட் ரிபாக் -
