முந்தல் 24
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பவுசர் ஒன்று இன்று (24) விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலையில் எரிபொருளை பறித்து விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பவுசர் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் விழ்ந்து சாரதி காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான எரிபொருள் பவுசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலதிக விசாரனையை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- காசிம், ஹபீல் பைனாஸ் -
----------------------------------------------------------------------------------------------------------------------
தேர்தல் விளம்பரம்
மக்களின் உள்ளங்களை வென்ற ஏழைகளின் தோழன், துடிப்புமிக்க இளம் அரசியல்வாதி BM. ஆஷிக் அவர்களை அதிக விருப்பு வாக்குகளால் மீண்டும் வெற்றிபெறச் செய்வோம்...
(இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்)






