றிஷாத் பதியுதீன் ம. வி இன் 15 வருட பூர்த்தி; கேக் வெட்டி கொண்டாடிய பழைய மாணவர் சங்கம்

புத்தளம்
றிஷாத் பதியுதீன் மஹா வித்தியாலயத்தின் 15 வருட பூர்த்தியை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்வுகள் நேற்று (17) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது, மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், ஆசிரியர்களின் வரவை அவதானித்து உரிய நேரத்தில் பாடவேளைகளை ஒழுங்கமைத்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து பாடசாலையை முன்னோக்கி கொண்டு செல்லும் அதிபர் முஹம்மது நஜ்மியின் சேவைகளை பழைய மாணவர் சங்கத்தினர் பாராட்டினர்.

அத்தோடு, அதிபரின் வழிகாட்டலில் பல தியாகங்களை செய்து மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால், உடல் உள சமுதாய பண்பாட்டுவளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்வதன் மூலம் மாணவர்களை பூரண மனிதனாக மாற்றும் செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் ஆசிரியர்களும் இதன்போது நன்றியோடு நினைவுகூறப்பட்டனர்.

அத்துடன், பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு விஷேடமாக வடிவமைக்கப்பட்ட கேக் வெட்டி , நினைவுப் பரிசில்கள் வழங்கி பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும், பாடசாலை மாணவர்களுல், ஆசிரியர்களும் தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்பட மாணவர்களும் கலந்துகொண்டனர்.

-ரஸீன் ரஸ்மின் -






Post a Comment

Previous Post Next Post