நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் போட்டியிடுவது பற்றி கட்சியின் முக்கியஸ்தர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் நாகவில்லு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், மன்னார் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் என பலமு; கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி நங்கள்; ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல வியூகங்களை அமைத்து வருகின்றோம்.
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திடன் சில மாவட்டங்களில் இணைந்து போட்டியிடுகிறோம். அத்துடன், பல இடங்களில் வேட்பாளர்கள் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தியோடு உடன்பாடு காணப்படாததன் காரணமாக தவிர்க்க முடியாமல் நாம் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடும் நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்த தேர்தல் முறைமையின் அடிப்படையில் இணைந்து போட்டியிடுவதை விட, தனித்துப் போட்டியிடுவதால் எமது கட்சிக்கு என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து வருகிறோம். சில பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும், இன்னும் சில பகுதிகளில் அது சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன், கற்பிட்டி பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிடுவது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேச சபையில் போட்டியிடுவது பற்றி ஐக்கிய மக்கள் சக்தியுடன் தொடர்ந்தும் பேசிக்pகொண்டிருக்கிறோம். எங்களால் முன்வைக்கப்பட்டுள்ள சில கோரிக்கைகள் அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாம் இணைந்து போட்டியிடுவோம்.
இல்லையெனின், எமது மரச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுர் அமைப்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களை திருப்த்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய முன்வராததால் நாம் மரச்சின்னத்தில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளுர் அமைப்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களை திருப்த்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில விட்டுக்கொடுப்புக்களை செய்ய முன்வராததால் நாம் மரச்சின்னத்தில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாங்கள் ஒருபோதும் பலவீனமடைய மாட்டோம்.
எவ்வாறாயினும், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி, பெரும்பான்னைக் கட்சிகள் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.
எவ்வாறாயினும், சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவின்றி, பெரும்பான்னைக் கட்சிகள் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது என்பதுதான் உண்மையாகும்.
தேர்தல் ஒன்று நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டால் அதனை உரிய காலத்திற்குள் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தினால்தான் தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தலை நடத்த பணமில்லை என்று கூறுவதும், தேர்தலுக்கு ஒதுக்கப்படும் பணம் வீண்விரம் என்றும் கதையைச் சொல்லி வருகிறார்கள்.
பிரயோசனமில்லாத பல வீண் செலவுகளை அரசாங்கம் இன்று முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் முழு செலவினங்களில் 1.3 வீதம்தான் தேர்தலுக்கான செலவீனமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருக்கிறது.
எனவே, இதனை மிகப்பெரிய செலவீனமாக காட்டி இந்த நாட்டின் உண்மையான அரசியல் நிலைவரம் என்ன என்பதை நாடும், நட்டு மக்களும், சர்வதேசமும் அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை இவர்கள் வேண்டும் என்றே தள்ளிப்போடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
-சாஹிப்-
