முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா ஆலயத்தின் மஹோற்சவம் நாளை

புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் நாளை நண்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட சுபவேளையில் ஆலய பிரதம குருவும் தர்மகர்த்தாவுமான கலாநிதி பிரம்மஸ்ரீ எஸ்.பந்தமநாபக் குருக்கள் தலைமையில் நடை பெறவுள்ளது.

உற்சவங்கள் தொடர்ந்து 28 தினங்கள் இடம் பெறும்.இதில் விநாயகர் உற்சவம் சுப்ரமணியர் உற்சவம் மஹா விஷ்ணு உற்சவம் , தீமிதிப்பு உற்சவம் , பிஷாடனர் உற்சவம் , நடேசர் உற்சவம் , வேட்டைத்தைிருவிழா , தேர்த் திருவிழா , தீர்த்த திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post