ரயில் ஊழியர்கள் கடமை நேரத்தின் போது சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் வகையில் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய கடமை நேரத்தின் போது பேஸ்புக், வட்ஸ்அப், டிக்டொக் உள்ளிட்ட சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ரயில்வே ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவையின் பாதுகாப்பு, செயற்திறன் மற்றும் பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் சேவையின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
