புத்தளத்தில் நாளை மறுதினம் மாபெரும் இஸ்லாமிய மாநாடு!


ரஸீன் ரஸ்மின்

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புத்தளம் கிளை மற்றும் புத்தளம் உப பிராந்தியம் என்பவற்றின் ஏற்பாட்டில் மாபெரும் இஸ்லாமிய மாநாடொன்று நாளை மறுதினம் சனிக்கிழமை (13) புத்தளம் பெரிய பள்ளவாசலில் இடம்பெறவுள்ளது.

"மலர்ச்சியான உலக வாழ்வு மகத்தான மறுமை வெற்றி" எனும் கருப்பொருளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை குறித்த மாநாடு நடைபெறவுள்ளது.

"இறை நம்பிக்கையும் மறுமை வாழ்வும்" எனும் தலைப்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர், "மலர்ச்சியான உலக வாழ்வு மகத்தான மறுமை வெற்றி" எனும் தலைப்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமீர் உஸ்தாத் எம்.எச்.எம்.உஸைர் (இஸ்லாஹி), "நவீன சிந்தனை சவால்களுக்கு மத்தியில் இஸ்லாமிய வாழ்வு" எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.ஏ.ஹூஸ்னி முபாரக் (இஸ்லாஹி) ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

குறித்த மாநாட்டில் பெண்களுக்கும் பிரத்தியேகமாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post