மத்துகம பிரதேசத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரி ஒருவரை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 12ஆம் திகதி மத்துகம பிரதேசத்தில் போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சென்றிருந்தனர்.
இதன்போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி அவர்களிடமிருந்து 245,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில், பதுரளிய மற்றும் மதுகம பகுதியைச் சேர்ந்த 30, 33 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும், 05 கிராம் 553 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
