ரஸீன் ரஸ்மின்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்டத்தின் பாலாவி - குவைத் சிட்டி, சாபி நகர், 100 வீட்டுத்திட்டம், முல்லை ஸ்கீம் மற்றும் அல்காசிமி சிட்டி ஆகிய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், புத்தளம் பிரதேச சபைத் தலைவரின் இணைப்பாளருமான ரிபாஸ் நஸீர் தலைமையில் அல்காசிமி சிட்டி ஜூம்ஆ மஸ்ஜித் வளாகத்தில் குறித்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளர் அஷ்ஷெய்க் பசால் இஸ்மாயில் (ஸலபி), பொறியியலாளர் முஹம்மது யாசின் உட்பட உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், உள்ளிட்டோருடன் அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, சுமார் 800 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

