புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்!


புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் 41 ஆவது அதிபராக எம்.யூ.எம்.சாஜஹான் (SLPS)  நியமிக்கப்பட்டுள்ளார்.

புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரிந்து  கடந்த மாதம் 25ம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற அல்ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.யூ.எம். ஷரீக் அவர்களின் வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயம் மற்றும் சிலாபம் நஸ்ரியா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

ஏ.எம்.உமர் ஆசிரியர் மற்றும் எஸ்.ஹைரியா ஆகியோரின் புதல்வராவார்.

1998 முதல் உமர் பாரூக் பாடசாலையின் ஆசிரியராகவும், 2013 முதல் பு/தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகவும், 2016 முதல் அதே பாடசாலையின் தரம் பெற்ற அதிபராகவும் சேவையாற்றினார்.

2018 முதல் மீண்டும் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும், 2024 முதல் ஆண்டிமுனை தமிழ்  மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராகவும் கடமையாற்றிய அனுபத்தைக் கொண்டவராவார்.

இடைநடுவே மூன்று ஆண்டுகள் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை நிருவகிக்கும் அனுபவத்தையும் இவர் பெற்றுக் கொண்டார்.

அந்த வகையில் 2025.06.26 தொடக்கம் தான் ஆரம்பக் கல்வியைக் கற்ற புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின் அதிபர் பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

குறித்த நியமனம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தின்  பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் இந்நியமனமாம் வழங்கப்பட்டுள்ளது.

என்.எம். ஹபீல் JP (கபூரி) - புதுக்குடியிருப்பு



Post a Comment

Previous Post Next Post