புத்தளம் மாநகர சபையின் மூன்றாவது கூட்டத்தில் தூய தேசத்திற்கான கட்சியின் உறுப்பினர் பாரூக் ரில்வான் அவர்கள், மாநகர சபையின் சேவைகளை சிறப்பாக்கும் நோக்கில் இரண்டு முக்கியமான முன்மொழிவுகளை முன்வைத்தார்.
முதலாவதாக, மாநகர சபைக்கு ஒரு அதிகாரப்பூர்வ Mobile Application உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். இந்த செயலியின் மூலம் பொதுமக்கள் தங்களது சேவை தேவைகளை விரைவாகப் பெற முடியும். மேலும், கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது, புகார்கள் மற்றும் பரிந்துரைகளை நேரடியாகச் சமர்ப்பிப்பது போன்ற வசதிகளும் இந்த செயலியில் இருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவதாக, மாநகர சபை கூட்டங்கள் நேரலையாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படவேண்டும் என்று கூறினார். மக்கள் தேர்தலில் நம்பிக்கை வைத்து தேர்வு செய்த உறுப்பினர்களால் என்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன மற்றும் எப்படிப்பட்ட முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளும் வகையில், சபையின் செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் நேரலையாக போடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் சேவையை டிஜிட்டல் வழியில் எளிமைப்படுத்தும் இந்த முன்மொழிவுகள், சபையில் உள்ள பலர் பூரண ஆதரவுடன் ஏற்றுக்கொண்டனர். இது புத்தளத்தில் நிர்வாகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கும் ஒரு படியாக பார்க்கப்படுகிறது. சபையின் செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் நேரலையாக போடுவதை சில மாதங்களின் பின் மீண்டும் பேசி முடிவு எடுப்போம் என்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
க்ளீன் நேஷன் கட்சியின் தலைவர் இஷாம் மாரிக்கார் அவர்கள், மாநகர சபையின் புதிய வருமான திட்டங்களை உருவாக்குவது குறித்து பேசினார்.
புத்தளம் கலப்பில் வருமானம் வரக்கூடிய புதிய படகு மற்றும் கயாகிங் சேவைகளை அறிமுகப்படுத்தி சுற்றுலா பயணிகளை வைத்து வருமானத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதனால் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடாதவாரு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவேண்டும் என்றும் வலியுருத்தினார்.
மேலும், மக்கள் வரி செலுத்தும் பண்பை ஊக்குவிக்க, ஒரு "Loyalty Card" திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும். சரியாக வரி செலுத்தும் குடிமக்களுக்கு விசேட சேவைகள், தள்ளுபடி, அல்லது இலவசமான வசதிகள் வழங்கப்பட வேண்டும். அவர்கள் வசதிகளை லொயல்டி புள்ளிகள் மூலமாக பெற்றுக் கொள்ளவதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது என்று கூறினார்.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். அந்த நம்பிக்கைக்கு பதிலளிக்க நம்மால் இயன்ற சிறந்த திட்டங்களை நாங்கள் முன்வைக்கிறோம்' என இஷாம் மாரிக்கார் குறிப்பிட்டார்.
இந்த யோசனைகள் சபையில் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், புத்தளத்திற்கான வளர்ச்சி மற்றும் திறந்த நிர்வாகத்திற்கான படிகள் என ஊழியர்களாலும் பாராட்டப்பட்டன.
- ஊடகப்பிரிவு -