தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், வெப்பம் காரணமாக மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கும் சமமாக விநியோகிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களை கழுவுதல் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு நீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கோரியுள்ளது.
அத்தகைய சூழ்நிலை ஏற்படும் போது, நுகர்வோரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மலைப் பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறலாம்.
இருப்பினும், இந்த வறட்சியான மற்றும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை வருத்தம் தெரிவிக்கிறது.
விசாரணைகள் - 1939 அழைப்பு மையம்