புத்தளம் - வேப்பமடு பாடசாலையில் இடம்பெற்ற 'கிளீன் ஸ்ரீ லங்கா' வேலைத்திட்ட போட்டி நிகழ்ச்சி!

கல்வி உயர் கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சினால் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தி வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட குழுவின் வேண்டுகோளுக்கு அமைய புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு என்பன வெள்ளிக்கிழமை (30) பாடசாலையின் உப அதிபர் எம்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

.ந்த நிகழ்வில் பிரதி அதிபர் எச்.நஸ்ருதீன், பகுதித் தலைவர்களான பாரூக் பதீன், எம்.எம்.றிபாஸ் ஆசிரியர்களான எம்.எஸ்.எஸ்.மௌபியா, எஸ்.எம்.பீ.முஹிபுர் நிஸா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

'செயல்களை முன்னெடுப்போம்-பொறுப்புடன் செயற்படுவோம்', 'சூழல் நேய பாடசாலைகளிலிருந்து எதிர்கால பசுமைத் தலைவர்கள்', 'பல்வகைமையை மதிக்கின்ற மகிழ்ச்சிக்குரிய வகுப்பறை', 'செயல்களில் நியாயத்தன்மை மற்றும் ஒவ்வொரு தீர்மானத்திலும் வெளிப்படைத்தன்மை மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல்' ஆகிய தலைப்புக்களில் மேற்படி நிகழ்ச்சிகள் புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அத்தோடு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு பாடசாலையின் பழைய மாணவர்கள் (1994ம் ஆண்டு) குழுவினரால் பெறுமதியான சான்றிதழ்களும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

மேற்படி சான்றிதழ் புத்தளம் வேப்பமடு .முஸ்லிம் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் டப்யூ.எம். ஜஸீலினால் பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

தகவல்: பாரூக் பதீன் ஆசிரியர்



Post a Comment

Previous Post Next Post