எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்காக உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்ற ஆடு, மாடுகளை அறுப்பதற்கு எண்ணியுள்ளவர்கள் மாநகர சபையின் அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
எதிர்வரும் 03.06.2025 ஆந் திகதிக்கு முன்னதாக மாநகர சபைக்கு சமுகமளித்து அனுமதிகளை பெற்றுக்கொள்ளுங்கள். உரிய நேரத்தில் அனுமதிகளை பெற்றுக்கொள்ளுமாறும், அனுமதியின்றி உழ்ஹிய்யா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போது ஏற்படுகின்ற சட்ட பிரச்சினைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
மேலும் இறைச்சிக்கழிவுகளை பாதைகள், பொது இடங்களில் வீசுவதை முற்றாக தவிர்ந்துகொள்ளுங்கள்.
புத்தளம் நகர சபையினால் கழிவுகளை போடுவதற்காக நெடுங்குளம் மைதானத்திட்கு அருகிலும், மாநகர சபை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திலும் வெட்டப்பட்டுள்ள பிரத்தியேக குழிகளிலும், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள ட்ரக்டர் வண்டிகளிலும் கழிவுகளை போடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
இவ்வண்ணம்,
செயலாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்,
புத்தளம் மாநகர சபை.