கற்பிட்டியில் கைவிடப்பட்ட நிலையில் கட்டுத் துப்பாக்கி மீட்பு!


கற்பிட்டி எம் .எச். எம் சியாஜ்

கற்பிட்டி - உச்சமுனை தேவாலயத்திற்கு பின்னால் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி விஜய கடற்படையினர் வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.ஆர் லக்ஸ்மன் றன்வல ஆராச்சி தலைமையிலான பொலிஸார் குறித்த பகுதியில் சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது, காட்டுப் பகுதியில் இருந்து கட்டுத் துப்பாக்கி ஒன்றும், பாவிக்கப்படாத தோட்டாவொன்றும், வெற்றுத் தோட்டா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த துப்பாக்கி மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டதா என்கின்ற கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கற்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




Post a Comment

Previous Post Next Post