நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்க உத்தரவு..!

பொதுப் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் ஆயுதப் படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் இதனை சபைக்கு அறிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12-ன் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post