உயிரிழந்தவர்ககளின் குடும்பங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி!

கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி, இறந்தவரின் உறவினர்களுக்கு இந்தப் பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியம்  மூலம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post