12 பேரை மீட்டேன்: விபத்தில் காயமடைந்த பயணி

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சிக்கிக்கொண்டவர்களில் 12 பேரைமீட்டேன் என அந்த பஸ் விபத்தில் சிக்கி, காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண் பயணி ஒருவர் தெரிவித்தார். 

இராணுவத்தில் பணியாற்றும் இந்த பயணி, விடுமுறையை முடித்துக்கொண்டு முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

பஸ் சற்று வேகமாக வந்தது. அவ்விடத்தில் திடீரென பிரேக் அடிக்கப்பட்டது.அப்போது பஸ், இடதுபுறத்தில் புரண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானது. நான், மயங்கிவிட்டேன்,எனினும், ஓரிரு நிமிடங்களில் மயக்கம் தெளிந்தது. கடுமையாக பாதிக்காதவர்களை ஒரு பக்கத்தில்வைத்துவிட்டு, ஏனையவர்களை மீட்டேன், மூன்று அல்லது நான்கு சின்ன பிள்ளைகளையும் மீட்டேன்.மொத்தமாக 12 பேரை மீட்டேன் என்றார். 

Post a Comment

Previous Post Next Post