முந்தல் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி!

சாஹிப்

49ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை (10) முந்தல் சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

வடமேல் மாகாண விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் முந்தல் பிரதேச செயலகம் இணைந்து மேற்படி விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகைளை நடத்தியது.

முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஐ.எச்.பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.பி.டபிள்யூ.ரி.எம்.எஸ்.பி. மல்வில உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வில் சமூக சேவையாளரும், தொழிலதிபருமான அஸ்ரின் அலாவுதீன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன், கணமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமூக சேவையாளரும், தொழிலதிபருமான அஸ்ரின் அலாவுதீன் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் என்பனவற்றை வழங்கி கௌரவித்ததுடன், தனது அணுசரணையில் குறித்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு வழங்குவதற்காக ஒருதொகை தொப்பிகளையும் முந்தல் பிரதேச செயலாளர் எம்.ஏ.ஐ.எச்.பெரேராவிடம் கையளித்தார்.



Post a Comment

Previous Post Next Post