கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விஷேட பாதுகாப்பு: முப்படைத் தளபதிகளுக்கு அறிவுறுத்தல்!

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களின் பாதுகாப்பபை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறிவுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (17) நடைபெற்ற விஷேட கூட்டத்தின் போதே இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பான சூழலைப் பேணுவதற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் போது ஏற்பட்ட இடையூறு மற்றும் துயரம் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் பொதுமக்கள் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகளில் கலந்து கொள்வதை உறுதி செய்வதே பிரதான நோக்கம் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.



Post a Comment

Previous Post Next Post