மறைந்த போப் பிரான்சிஸுக்கு இறுதி மரியாதை செலுத்தவும், அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எதிர்க்கட்சி பாராளுன்ற உறுப்பினர்கள் காவிந்த ஜெயவர்தன, ஹெக்டர் அப்புஹாமியும் வத்திக்கான் சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் வியாழக்கிழமை(24) மாலை 6.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ருடு-217 மூலம் அபுதாபிக்குப் புறப்பட்டனர். அபுதாபியிலிருந்து மற்றொரு விமானத்தில் ரோமில் உள்ள வத்திக்கான் நகரை சென்றடைந்தனர்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மறைந்த போப் பிரான்சிஸூக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறுகிறது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் இரவு மூடப்பட்டது.
இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 128,000 க்கும் அதிகமானோர் புனித பேதுரு பேராலய சதுக்கத்திற்குள் பிரவேசித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் 170 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவையொட்டி நேற்று (25) முதல் வத்திக்கானில் 9 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


