பிள்ளையான் கைது; காரணம் வெளியானது!

 

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து நேற்று (08) இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பின்னர் கிழக்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் ( பிள்ளையான்) கடந்த 18 வருடங்களுக்கு பின்னர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிவனேசத்துரை சந்திரகாந்தன் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post