ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரச்சார பொது கூட்டமும், வேட்பாளர் அறிமுகமும் நேற்று (05) மாலை முதல் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம்பெற்றது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், முதன்மை வேட்பாளருமாகிய ரணீஸ் பதூர்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்ப்பீட உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான SHM. நியாஸ் , கட்சியின் மூத்த போராளிகளும், உயர்பீட உருப்பினர்களுமான ஹாதி,ஜௌபர் மரிக்கார் உட்பட இன்னும் பல உயர்ப்பீட உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நகர சபை உறுப்பினர்களான பர்வின் ராஜா,சிஹான் மற்றும் கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது கட்சியின் மீதும்,வேட்பாளர்கள் மீதும் சுமத்தப்பட்ட போலி பிரச்சாரங்களுக்கு பதிலடிகள் வழங்கப்பட்டதோடு, எதிர்க்கால புத்தளம் பற்றிய தெளிவான விளக்கங்களும் வழங்கப்பட்டன.
- ஊடகப்பிரிவு -
தேர்தல் விளம்பரங்கள்











