எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்று புத்தளம் விஜயம்!

ரஸீன் ரஸ்மின்

எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று (06) புத்தளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் புத்தளம் , கற்பிட்டி, சிலபாம் மற்றும் ஆனமடுவ ஆகிய சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெறவுள்ள தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்துகொள்வார்.

இதன்படி, இன்று பிற்பகல் சிலாபத்திற்கும், மாலை 4 மணிக்கு ஆனமடுவ பகுதிக்கும், மாலை 5 மணிக்கு நுரைச்சோலைக்கும் சஜித் பிரேமதாச வருகை தரவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Paid Add

Paid Add

Paid Add

Paid Add

Post a Comment

Previous Post Next Post