UDAPPU | NEWS : By: உடப்பு - க.மகாதேவன்
வரலாற்று சிறப்பு வாய்ந்த புத்தளம்-உடப்பூரின் சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு, முதல் நிகழ்வுகள் உடப்பு தமிழ்க்கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (22)ஆரம்பமானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) முளைப்பதித்தல் மூலம் இது ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த சித்திரைச் செவ்வாயின் முக்கிய நோக்கமானது, இந்த மாதத்தில் வெயில் அகோரமானதாகும்.
இதனால் அம்மை நோய் மக்களுக்கு ஏற்படுவதுண்டு. அதை நிவர்த்தி செய்யும் முகமாகவும், மாரியம்மனுக்கு வேண்டியும் ,இந்த நிகழ்வு செய்யப்பட்டதாக வம்சாவழியாக அறியப்படுகின்றது.
அத்துடன் மழையை வேண்டியும் இது செய்யப்பட்டதாக அறியப்படுகின்றது. இறுதி சித்திரைச் செவ்வாய் எதிர்வரும் (30) திகதி நிறைவடையும்.
ADD








