மதுரங்குளி அர் - றஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கு நாமல் ராஜபக்ஷ விஜயம்!



ரஸீன் ரஸ்மின்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ, மதுரங்குளி, கடையாமோட்டை அர் - றஷீதிய்யா அரபுக் கல்லூரிக்கு நேற்று (22) மாலை சிநேகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மதுரங்குளி – கடையாமோட்டையில் நேற்று (22) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் புத்தளம் அமைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மேற்படி அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
Paid Add

இதன்போது, அர் - றஷீதிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் பி.எம்.பைஸல் முனீர் (ரஷாதி) தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராபக்ஷ கலந்துகொண்டதுடன், மதரஸாவின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

மேலும், குறித்த அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுடனும் அவர் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், பொதுஜன பெரமுனவின் புத்தளம் அமைப்பாளருமான ஏ.எச்.எம்.ரியாஸ் உட்பட உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


தேர்தல் விளம்பரம் Piad Add







Post a Comment

Previous Post Next Post