அரசியல் செயற்பாட்டாளரான டான் பிரியசாத் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமகிகப்பட்ட
பின்னர் அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீதொட்டமுல்லவில் உள்ள 'லக்சந்த செவன' அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று (22) இரவு 9:10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


